[X] Close

அவிநாசி அருகே பேருந்து கவிழ்ந்து 19 பேர் காயம்


19

  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 06:13 am
  • அ+ அ-

மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை மம்தா வெளியிட்டார். அதில், தற்போதைய எம்.பி.க்கள் 10 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. வேட்பாளர் பட்டியலில் 18 புது முகங்கள் இடம்பெற்றனர். மேலும் இந்தத் தேர்தலில் ‘சீட்’ கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த உள்ளூர் தலைவர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதனால் கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஒரு காலத்தில் 2-வது இடத்தில் செல்வாக்குடன் இருந்த முகுல் ராய் அதிருப்தி காரணமாக ஏற்கெனவே பாஜக.வில் சேர்ந்து விட்டார். இந்நிலையில், திரிணமூல் கட்சியில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை பாஜக.வுக்கு இழுக்க முகுல் ராய் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

கூச்பெஹர், பசிர்ஹத், ஜார்கிராம், மெதினிபூர், போல்பூர், பிஷ்ணுபூர், கிருஷ்ணாநகர் உட்பட 10 தொகுதிகளின் எம்.பி.க்களுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தத் தொகுதிகளில் திரிணமூல் உள்ளூர் தலைவர்களுக்குள் கோஷ்டி பூசலும் அதிகரித்துள்ளது. இதனால் இந்தத் தொகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக பாஜக தீவிர பணியாற்றி செல்வாக்கை அதிகரித்துள்ளது.

திரிணமூல் கட்சியில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர்களுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர்களுக்குப் பதில் அரசியலில் அனுபவம் இல்லாத நடிகைகள் மற்றும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளில் இருந்து பிரிந்து வந்தவர்களுக்கு திரிணமூல் காங்கிரஸில் ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது. அதனால் உள்ளூர் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குறிப்பாக தற்போதைய எம்.பி.க்கள் சவுமித்ரா கான், அனுபம் ஹஸ்ரா தவிர திரிணமூல் மூத்த தலைவரும் 4 முறை எம்எல்ஏ தேர்தலில் வெற்றி பெற்றவருமான அர்ஜுன் சிங்குக்கு மக்களவைத் தேர்தலில் ‘சீட்’ வழங்கவில்லை. பாரக்பூர் தொகுதியில் போட்டியிட அர்ஜுன் சிங் விருப்பம் தெரிவித்திருந்தார். ‘சீட்’ கிடைக்காததால் அவர் தற்போது பாஜக.வுக்கு தாவிவிட்டார்.

பரபரப்பான சூழ்நிலையில், பாஜக மாநில தலைவர்கள் கூறும்போது, ‘‘இன்னும் சில நாட்களில் திரிணமூல் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்கள், தலைவர்கள் பலர் பாஜக.வில் இணைவார்கள். பொறுத்திருந்து பாருங்கள். ஆட்டம் தொடங்கிவிட்டது’’ என்கின்றனர்.

அதற்கேற்ப பலூர்கட் மக்களவைத் தொகுதியில் அர்பிதா கோஷுக்கு மீண்டும் ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது. இதற்குதிரிணமூல் தெற்கு தினாஜ்பூர் மாவட்டதலைவர் பிப்லேப் மித்ரா வெளிப்படையாகவே அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இதேபோல் கூச்பெஹர் தொகுதி எம்.பி. பார்த்தா பிரதிம் ரேக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதில்கடந்த ஆண்டு கட்சியில் சேர்ந்த பரேஷ்சந்திரா அதிகாரிக்கு ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது. இவர் இடதுசாரி அரசில் அமைச்சராக இருந்தவர். தேர்தல் ‘சீட்’ கிடைக்காதது குறித்து ரே எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், அவரை இழுக்க பாஜக தலைவர்கள் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸில் இருந்து திரிணமூல் கட்சிக்கு தாவிய மவுசம் பெனசிர் நூர், மால்டா வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘திரிணமூல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது 100 சதவீத நம்பிக்கை உள்ளது. கட்சியின் கொள்கை ஒழுக்கத்தை அவர்கள் கடைப்பிடிப்பவர்கள். ஆனால், தேர்தலில் போட்டியிட விரும்பி சிலருக்கு ‘சீட்’ கிடைக்காமல் போயிருக்கும். அவர்கள் வேறு வகையில் சிந்திக்கலாம். கட்சியை விட்டு போவதாக இருந்தால், அவர்கள் போவதையே விரும்புகிறேன்’’ என்றார்.

காங்கிரஸ் மாநில தலைவர் சோமன் மித்ரா கூறும்போது, ‘‘திரிணமூல் கட்சி என்ன விதைத்ததோ, அதை இப்போது அறுவடை செய்யப் போகிறது. மேற்குவங்கத்தில் பாஜக.வை வளர்த்துவிட்டதே திரிணமூல் கட்சிதான். மதச்சார்பற்ற காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை அழித்தவர்தான் மம்தா’’ என்றார்.- பிடிஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close