[X] Close

சேலத்தில் மகளைக் கொன்று பெற்றோர் தற்கொலை: காதல் விவகாரமா என போலீஸார் விசாரணை


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 10:11 am
  • அ+ அ-

நாடு முழுவதும் 20 மாநிலங் கள் மற்றும் யூனியன் பிரதே சங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகள் மற்றும் 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற உள்ள முதல்கட்ட தேர்தலுக் கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. தேர்தல் நெருங்கிவிட்டதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

நாட்டின் 17-வது மக்கள வைத் தேர்தலுக்கான அட்ட வணையை, தலைமை தேர் தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த 10-ம் தேதி வெளியிட் டார். இதன்படி ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக் குப் பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுடன் ஆந் திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக் கும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

இதில் பிஹார், உத்தரபிர தேசம் மற்றும் மேற்குவங்கத் தில் அதிகபட்சமாக 7 கட்டங் களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் களுக்குட்பட்ட 91 மக்களவை தொகுதிகளில் முதல்கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத்தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகா ராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகா லயா 2, மிசோரம் 1, நாகா லாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தரபிரதேசம் 8, உத்தரா கண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபர் தீவு கள் 1, லட்சத்தீவுகள் 1 தொகுதி ஆகியவற்றில் முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 25. மனுக்கள் பரிசீலனை 26-ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் 28 ஆகும்.

முதல்கட்ட மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா (175), ஒடிசா (28), அருணாச்சல பிரதேசம் (60) மற்றும் சிக்கிம் (32) ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஒடிசாவைத் தவிர 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் நெருங்கிவிட்ட தால் வேட்பாளர்களை அறி விக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள் ளன. சில கட்சிகள் வேட் பாளர்களை அறிவித்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றன.

ஆந்திராவைப் பொறுத்த வரை முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆளும் தெலுங்கு தேசம் தனித்து போட்டியிடுகிறது. அங்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தனித்தனியாக களம் காண்கின்றன.

ஒடிசாவைப் பொறுத்த வரை முதல்வர் நவீன் பட் நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கடந்த 2000-வது ஆண்டு முதல் தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சியை அகற்ற பாஜகவும் காங்கிரஸும் திட்டமிட்டுள் ளன. இதனால் அங்கு மும் முனை போட்டி நிலவுகிறது.

அருணாச்சல பிரதேசத் தில் பேமா காண்டு தலைமை யிலான பாஜக ஆட்சி நடை பெறுகிறது. அங்கு பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. சிக்கிம் மாநிலத் தில் சிக்கிம் ஜனநாயக முன் னணியைச் சேர்ந்த பவண் குமார் சாம்லிங் கடந்த 1999-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வருகிறார்.

தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற் காக தேர்தல் ஆணையம் விரி வான பாதுகாப்பு ஏற்பாடு களை செய்துள்ளது. குறிப் பாக, தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வெளிமாநிலங் களில் இருந்து துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close