[X] Close

அரசுப் பணியை ராஜினாமா செய்த காஷ்மீர் ஐஏஎஸ் அதிகாரி புதிய கட்சி தொடக்கம்


former-ias-officer-shah-faesal-to-launch-political-party-tomorrow

ஷா ஃபைசல்

  • பால்நிலவன்
  • Posted: 16 Mar, 2019 18:47 pm
  • அ+ அ-

மத்திய அரசு முஸ்லிம் மக்களிடத்தில் பாரபட்சமாக நடப்பதாக குற்றம்சாட்டி தனது அரசுப் பணியை ராஜினாமா செய்த காஷ்மீர் (முன்னாள்) ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல் நாளை புதிய கட்சி தொடங்குகிறார்.

2009 ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்தவர் ஷா பைசல். பின்னர் மத்திய அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தார். இவர் தனது ஐஏஎஸ் பதவியை இரு மாதங்களுக்கு முன்பாக (கடந்த ஜனவரி மாதம்) ராஜினாமா செய்தார்.

ராஜினாமாவின்போது, காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்றுவரும் அசாதாரணமான அரசியல் கொலைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அரசாங்கத்தில் முஸ்லிகள் ஓரங்கப்பட்டப்படுவதாக குற்றம் சாட்டினார்.

மத்திய அரசின் ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத் துறை ஆகிய பொது நிறுவனங்கள் ஆகியவை சீர்கெட்டுப்போனதால் நாட்டின் அரசியலமைப்பு முறைக்கே குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மத்திய அரசை குறை கூறினார்.

ஜனவரியில் அவர் ராஜினாமா செய்ததற்கு பிறகு முழுமூச்சாக மக்கள் இயக்கம் ஒன்றை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டார். தொடர்ந்து இளைஞர்களை அவர் சந்தித்தார். காஷ்மீரில் "ஊழல் இல்லாத, தூய்மையான மற்றும் வெளிப்படையான" அரசியலை உருவாக்க முயன்றுவருவதாகக் கூறி இளைஞர்களை ஆதரவு கோரி வந்தார்.

அவர் தோற்றுவிக்கும் புதிய கட்சி ஸ்ரீநகரின் ராஜ்பாக் பகுதியில் நாளை தொடங்கப்பட உள்ளது. இதற்கான தொடக்கவிழா ராஜ்பாக் கிண்டன் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close