[X] Close

தேர்தலில் ஓட்டுப் போடக் காத்திருக்கும் பாகுபலி, ஆப்பிள், இட்லி


  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 16 Mar, 2019 11:42 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. அரசியல் கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தெலங்கானாவில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சிலரின் பெயர்கள் 'பாகுபலி', 'ஆப்பிள்', 'இட்லி', 'செக்ஸ்' என்ற ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற வித்தியாசமான பெயர்களில் 37 வாக்காளர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் சிலவற்றை தேர்தல் ஆணையம் உடனடியாக நீக்கிவிட்டது.

இதுகுறித்து தெலங்கானா தலைமைத் தேர்தல் அதிகாரி ரஜத் குமார் கூறும்போது, ''எழுத்துப் பிழை மற்றும் ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக இந்தத் தவறு நேர்ந்திருக்கலாம். இதில் 18 பேரின் பெயர்களை நீக்கியுள்ளோம்.

சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, 17 லட்சம் வாக்காளர்களைப் புதிதாகச் சேர்த்துள்ளோம். சுமார் 2.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 1.9 லட்சம் பெயர்கள் போலியானவை. 44 ஆயிரம் பேர் இறந்துவிட்டனர். தொடர்ந்து வாக்காளர் பட்டியலைச் சீரமைத்து வருகிறோம்.

பட்டியலில் பாட்மிண்டன் வீரர் ஜ்வாலா கட்டா, ஐபிஎஸ் அதிகாரி கிருஷ்ண பிரசாத் ஆகியோரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. பொதுவாக சிலரின் பெயர்கள் விடுபடுவது வழக்கம்தான். விஐபிக்களின் பெயர் விடுபடும்போது பெரிய கவனத்தை ஏற்படுத்தி விடுகிறது. விரைவில் அவர்களது பிரச்சினை சரிசெய்யப்படும்'' என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close