[X] Close

சந்திரசேகர் ஆசாத்தை பிரியங்கா சந்தித்ததால் கோபம்; சோனியா, ராகுல் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு?- அகிலேஷுடன் மாயாவதி அவசர ஆலோசனை


priyanka-met-with-chandrashekhar-azat

பிரியங்கா காந்தி4

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 11:39 am
  • அ+ அ-

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், அஜித் சிங் தலைமையிலான ஆர்எல்டி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 78 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. மீதமுள்ள அமேதி, ரே பரேலி தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் போட்டியிட வசதியாக சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.

இந்நிலையில் திடீர் திருப்பமாக உத்தரபிரதேசத்தில் வலுவான தலித் அமைப்பான பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை, பிரியங்கா காந்தி 2 நாட்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார். மீரட்டிலுள்ள மருத்துவமனையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என்று பிரியங்கா தெரிவித்தார்.

ஆனால் இந்த சந்திப்பு காரணமாக கலக்கம் அடைந்துள்ள மாயாவதி, தேர்தலில் வெற்றி வாய்ப்பு பாதிக்குமோ என்ற அச்சத்தில் உடனடியாக அகிலேஷ் யாதவை அழைத்துப் பேசியுள்ளார்.

காங்கிரஸுடன், பீம் ஆர்மியும் இணைந்து போட்டியிட்டால் அது தங்களது வெற்றிவாய்ப்பை பாதிக்கும் என்று அப்போது மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் அமேதி, ரே பரேலி தொகுதிகளுக்கும் தங்களது கூட்டணி வேட்பாளர்களை அகிலேஷ். மாயாவதி ஆகியோர்அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close