[X] Close

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம்- தலைமைத் தேர்தல் ஆணையம் தகவல்


electronic-voting

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 11:34 am
  • அ+ அ-

வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. அப்போது சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காணாமல் போயின. அவை ஓட்டல்கள், சாலைகள், எம்எல்ஏவின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. தேர்தல் அலுவலர்களின் அலட்சியம், பாதுகாப்பு குறைபாடு ஆகியவையே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கண்டறியப்பட்டது.

எனவே வரும் மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வாகனங்கள் எங்கு செல்கிறது, எந்த பாதையில் செல்கிறது, பாதை மாறுகிறதா, இடையில் நிறுத்தப்படுகிறதா என்பதை துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.

கட்டுப்பாட்டு மையங்கள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படும்போதும், தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுசெல்லப்படும்போதும் வாகனங்களின் போக்குவரத்து முழுமையாகக் கண்காணிக்கப்படும். இதற்காக கட்டுப்பாட்டு மையங்களை அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் 9.28 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வரும் மக்களவைத் தேர்தலில் 10.35 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 39.6 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் 17.4 லட்சம் விவிபாட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close