[X] Close

'புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர்': பிரேமலதாவின் பிரச்சார உளறல்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 12:18 pm
  • அ+ அ-

நாட்டில் உள்ள சில வசதி படைத்த தொழிலதிபர்களிடம் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் ‘அனைவருக்கும் மருத்துவ வசதி' என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று சுகாதாரத் துறை. நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் அதன் வளர்ச்சி சாத்தியமாகும். பல நாடுகள் வறுமையின் பிடியில் சிக்குவதற்கு, முறையான சுகாதார வசதி இல்லாததே முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

எனவே, சுகாதாரத்துறையை, முதலில் வலிமைப்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், சுகாதாரத்துறையை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும். அந்தத் துறையின் வளர்ச்சிக்காக அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.

3 வாக்குறுதிகளை சேர்க்க முடிவுமக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் 3 வாக்குறுதிகளை சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். முதலாவது, அனைவருக்கும் மருத்துவ வசதி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றும் வாக்குறுதி. அதன்படி, நாட்டில் உள்ள அனைவருக்கும் குறைந்தபட்ச மருத்துவ வசதி உறுதிப்படுத்தப்படும்.

இரண்டாவது, உள்நாட்டு மொத்த உற்பத்தி செலவில், சுகாதாரத் துறைக்கான செலவினங்களை 3 சதவீதமாக உயர்த்துவது; மூன்றாவது, நாட்டில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான வாக்குறுதி. இயன்ற வரை, இந்த 3 வாக்குறுதிகளையும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வோம்.

தற்போது மத்திய பாஜக அரசு செயல்படுத்தும் ‘ஆயுஷ்மான் பாரத்' திட்டமானது போதிய முன்னேற்பாட்டுடன் செயல்படுத்தப்படவில்லை. ஒரு சில நோய்களுக்கு மட்டுமே அதில் சிகிச்சை பெற முடிகிறது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், சில வசதி படைத்த தொழிலதிபர்களின் நலனுக்காகவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்களிடமே இத்திட்டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.- பிடிஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close