[X] Close

விவிபாட் இயந்திரத்தின் ஒப்புகை சீட்டுகள் மூலம் 50% வாக்குகளை சரிபார்க்க கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


vvpat

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 11:23 am
  • அ+ அ-

வரும் மக்களவைத் தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை விவிபாட் இயந்திரத்தின் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 21 எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இதுகுறித்து வரும் 25-ம்தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலின்போது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரம் (விவிபாட்) அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

தற்போதைய தேர்தல் நடத்தைவிதிகளின்படி அனைத்து தொகுதிகளிலும் தலா ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகள், விவிபாட் இயந்திரத்தின் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்படுகின்றன. இது ஒட்டுமொத்த வாக்குகளில் 0.44 சதவீதம் மட்டுமே. எனவே வரும் மக்களவைத் தேர்தலின்போது அனைத்து தொகுதிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ், திமுக உட்பட 21 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பு நேற்றுவிசாரணைக்கு வந்தது. இதுகுறித்து 25-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. வழக்கின் அடுத்த விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close