[X] Close

மாடிப்படி கவனம்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 11:47 am
  • அ+ அ-

கொச்சி, பிடிஐ

கேரள மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி மான்டி வியாழக்கிழமை எனும் பண்டிகை வருகிறது என்பதால், வாக்குப்பதிவு நாளை மாற்றி அமைக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் இந்திய கத்தோலிக்க பிஷப் மாநாடு(சிபிசிஐ) கோரிக்கை மனு அளித்துள்ளது.

மதுரையில் சித்தரை திருவிழாவில் அழகர் எதிர்சேவை செய்யும் நாளில் அதாவது ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்று மதுரையில் மக்கள் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்படும், வாக்குப் பதிவில் தொய்வு ஏற்படும் எனக் கூறியும், தேர்தல் தேதியை தள்ளிவைக்கக்கோரி நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் அணுகியுள்ளார்கள்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் மிகப்பெரிய கிறிஸ்தவ அமைப்பான கத்தோலிக்க அமைப்பும் இதேபோன்ற கோரிக்கையை  வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கத்தோலிக்க பிஷப் மாநாடு(சிபிசிஐ) பொதுச்செயலாளர் தியோடர் மஸ்கரன்ஹஸ், தலைமைத் தேர்தல்  தேர்தல் ஆணையர் அரோராவிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

 " கிறிஸ்தவர்களின் முக்கியமான நாளான மான்டி வியாழக்கிழமை(மான்டி தேர்ஸ்டே) தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று வருகிறது. இதனால், அன்றைய நாளில் வழிபாடுகள் நடத்துவதும், தேர்தலில் வாக்களிப்பதிலும் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும். அன்றைய நாளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாட்டை கைவிட்டு, தேர்தல் பணியில் ஈடுபட வேண்டியது இருக்கும்.

கேரள மாநிலத்தில் பெரும்பாலான பள்ளிகளிலும், தேவாலயங்களிலும் வாக்குப்பதிவு நடக்கும். பெரும்பாலான பள்ளிகளை தேவாலயங்களே நடத்துகிறது. அன்றைய நாளில் வாக்குப்பதிவு நடந்தால், வழிபாடு செய்வதிலும் சிக்கல் ஏற்படும்.

கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை புனித வெள்ளி, அதற்கு முன் வரும் வியாழக்கிழமை, ஈஸ்டர் பண்டிகை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது.

மத உணர்வுகள் அடிப்படையில் தேவாலாயம் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால், அந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் சந்திக்கும் சிக்கல்களையும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு செல்வதிலும் இருக்கும் சிரமங்களையும் குறிப்பிடுகிறோம்.

தேர்தல் நடத்தும்போது எந்தமாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யும் என்பதை நாங்கள் அறிவோம். அதேசமயம்,லட்சக்கணக்கான கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டு வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறோம். ஏனென்றால், தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் அன்றைய நாள் கிறிஸ்தவர்களுக்கு புனிதமான நாளாகும்.

அறிவித்த தேர்தல் தேதியை மாற்றுவதில் ஏதேனும் உங்களுக்கும், உங்கள் அலுவலகத்துக்கும் அசவுகரியங்கள் ஏற்படலாம். தேர்தல் தேதியை மாற்றாமலும் இருப்பதும் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால், எங்கள் கவலை அந்த நாளில் தேர்தல் நடத்துவது பல சிரமங்களே ஏற்படுத்தும் என்பது மட்டுமே

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18-ம் தேதி 2-வது கட்டமாக நடக்கும் மக்களவைத் தேர்தலில் அசாம், பிஹார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, தமிழகம், மணிப்பூர், ஒடிசா, புதுச்சேரி, திரிபுரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடக்கிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close