[X] Close

அதிமுக பொம்மலாட்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: இளையான்குடியில் ப.சிதம்பரம் பேச்சு


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 10:11 am
  • அ+ அ-

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அண்மையில் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், "சீன அதிபரை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி அஞ்சுகிறார்" என்று விமர்சனம் செய்தார்.

இதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று ட்விட்டர் மூலம் பதிலளித்தார். அவர் கூறியதாவது:

கடந்த 2009-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்டது. அப்போது இந்தியாவுக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. காங்கிரஸ் அரசால் சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற முடியவில்லை.

கடந்த 2016-ம் ஆண்டில் மத்தியில் தற்போது ஆளும் பாஜக அரசு இதே கோரிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முன்வைத்தது. இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆதரவு அளித்தன. கடந்த 2017-ம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் இந்தியாவின் தீர்மானத்தை முன்மொழிந்தன.

இந்தியா தனியாக இல்லை

நடப்பு 2019-ம் ஆண்டில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் இந்தியாவின் தீர்மானத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தமுள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் ஆதரவு அளித்தன. இந்தியா இப்போது தனியாக இல்லை. உலக நாடுகளின் ஆதரவு பெருகி வருகிறது.

இவ்வாறு சுஷ்மா தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close