[X] Close

மன்மோகன்- மோடி ஒப்பீடு விவகாரம்; எனது கருத்து திரிக்கப்பட்டுள்ளது: ஷீலா தீட்சித் விளக்கம்


sheela

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 09:52 am
  • அ+ அ-

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடி குறித்த எனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு ஷீலா தீட்சித் பேட்டியளித்துள்ளார். கடந்த 2008 மும்பைதாக்குதலின்போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவில்லை. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக எதிரியின் வீட்டுக்கே சென்று பிரதமர் மோடி பாடம் கற்பித்துள்ளார். உங்கள் கருத்து என்ன என்று நிருபர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஷீலா தீட்சித், உங்கள் (நிருபர்) கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி அளவுக்கு மன்மோகன் சிங்கிடம் துணிச்சல் இல்லை" என்று தெரிவித்தார்.

ஷீலா தீட்சித்துக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார். இதர பாஜக தலைவர்களும் ஷீலாவை பாராட்டி வருகின்றனர்.

டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா கூறியபோது, "நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க காங்கிரஸ் கடுமையாக உழைத்து வருகிறது" என்று விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஷீலா தீட்சித் ட்விட்டரில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "தீவிரவாதத்துக்கு எதிராக நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பதாக சிலருக்கு தோன்றலாம். இது அரசியல் விளையாட்டு என்றுதான் கூறினேன். எனது கருத்தை சில ஊடகங்கள் தவறாக திரித்து வெளியிட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close