[X] Close

அவதூறு வழக்கில் ஏப். 30-ல் கேஜ்ரிவால் ஆஜராக உத்தரவு


keijirawal

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 09:51 am
  • அ+ அ-

பாஜக தலைவர் ராஜீவ் பப்பர் தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் ஏப்ரல் 30-ம் தேதி நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சுஷில்குமார் குப்தா, எம்எல்ஏ மனோஜ் குமார், செய்தித் தொடர்பாளர் அதீஷி மார்லேனா ஆகிய நால்வருக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் ராஜீவ் பப்பர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “டெல்லி வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு பாஜகவே காரணம் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. சமூகத்தின் சில பிரிவினருக்கு மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு டெல்லி பெருநகர கூடுதல் முதன்மை நீதிபதி சமர் விஷால் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கேஜ்ரிவால் உள்ளிட்டோர் ஏப்ரல் 30-ம் தேதி நேரில் ஆஜராக அவர் உத்தரவிட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close