[X] Close

உ.பி.யில் ராகுல், பிரியங்கா இணைந்து 18 பிரச்சாரக் கூட்டங்கள்


18

  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 19:13 pm
  • அ+ அ-

 

 

மும்பை, ஐஏஎன்எஸ்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர், 32 பேர் காயமடைந்தனர்.

மும்பையின் தெற்குப் பகுதியில் பிரபல ஆங்கில நாளேட்டிந் கட்டிடத்தையும், சதிரபதி சிவாஜி ரயில் நிலையத்தையும் இணைக்கும் நடைமேம்பாலம் நேற்று இரவு 7.30 மணியளவில் திடிரென இடிந்து விழுந்தது.

அப்போது அந்த பாலத்தின் கீழே சென்றுகொண்டிருந்த சில வாகனங்கள் மீது பாலத்தின் இடிபாடுகள் விழுந்தன. இதில் சம்பவ இடத்திலயே 6 பேர் உயிரிழந்தனர். 32 காயமடைந்தனர். உடனடியாக மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்துவந்து, இடுபாடிகளில் சிக்கி இருந்தவர்களையும், காயம்பட்டவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாலம் இடிந்து விழுந்த நேரத்தில் அந்த சாலையில் அருகே இருந்த சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால் வாகனங்கள் ஏதும் வரவில்லை. ஒருவேளை வாகனங்கள் சென்றுகொண்டிருந்த நேரத்தில் பாலம் இடிந்திருந்தால், உயிர்பலி அதிகரித்து இருக்கும் என மீட்புப்படையினர் தெரிவிக்கின்றனர்.  

இந்த விபத்து தொடர்பாக ரயில்வே துறை மீதும், மும்பை பிஎம்சி மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த 6 பேரின் அடையாளம் தெரிந்தது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தவும் முதல்வர் பட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

மும்பையில் கடந்த 18 மாதங்களில் இடிந்து விழும் 3-வது மேம்பாலம் இதுவாகும்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " மும்பை நடைமேம்பால விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன் " எனத் தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close