[X] Close

கர்தார்பூர் குருத்வாராவுக்கு விசா இல்லாமல் அனுமதி: பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்


india-pakistan

  • kamadenu
  • Posted: 15 Mar, 2019 10:51 am
  • அ+ அ-

கர்தார்பூர் குருத்வாராவுக்கு தினமும் 5,000 யாத்ரீகர்களை விசா இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சீக்கிய மத குருவான குருநானக் கடைசி காலத்தில் வாழ்ந்து மறைந்த இடம் பாகிஸ்தானில் எல்லையோர பகுதியில் உள்ள கர்தார்பூரில் அமைந்துள்ளது. அங்கு சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாரா உள்ளது.

பஞ்சாப் மாநிலம் தேரா பாபா நானக் என்ற இடத்தில் இருந்து கர்த்தார்பூருக்கு சாலை அமைக்க இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு நவம்பரில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பாதை அமைக்கும் பணிகள் மற்றும் இந்த பாதையில் சீக்கிய யாத்ரீகர்களை வழிபாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்து இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரிகளிடையே, பஞ்சாப் எல்லையான அடாரியில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது, இந்தியாவில் இருந்து கர்தார்பூர் குருத்வாரா வுக்கு தினமும் 5,000 யாத்ரீகர்களை விசா இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியது. மேலும் அந்த சாலையில் கர்தார்பூருக்கு பக்தர்கள் நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டும் என்றும் வாரத்தின் 7 நாட்களும் சாலை திறந்திருக்க வேண்டும் என்றும் இந்தியா சார்பில் கோரப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக வும் ஆக்கபூர்வமாகவும் நடந்ததா கவும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டதாகவும் இந்தியவெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஏப்ரல் 2-ல் மீண்டும் பேச்சு

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 2-ம் தேதி வாகாவில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் காஷ்மீரில் பாகிஸ் தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இரு தரப்பிலும் அதிகாரிகள் அளவில் நடந்த முதல் பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close