[X] Close

செல்வாக்கு மிகுந்த எம்எல்ஏ-வை பாஜகவிடம் இழந்தார் மம்தா


bjp-mla

  • kamadenu
  • Posted: 15 Mar, 2019 10:29 am
  • அ+ அ-

மேற்கு வங்கத்தின் பத்பரா தொகுதியிலிருந்து 4 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் அர்ஜுன் சிங். அருகில் உள்ள தொகுதிகளிலும் செல்வாக்கு மிகுந்தவர். எனவே வரும் தேர்தலில் இத்தொகுதிகளை உள்ளடக்கிய பாரக்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரினார்.

இந்நிலையில் இத் தொகுதியை தற்போதைய எம்.பி. தினேஷ் திரிவேதிக்கு மம்தா மீண்டும் ஒதுக்கினார்.

இதனால் ஏமாற்றம் அடைந்த அர்ஜுன் சிங் நேற்று பாஜக மூத்த தலைவர்கள் விஜய் வர்கியா, முகுல் ராய் ஆகியோர் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார்.

பின்னர் அர்ஜுன் சிங் கூறும்போது, “பாரக்பூரின் தற்போதைய எம்.பி. மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே எனது விருப்பத்தை கூறினேன். நான் பாஜகவில் இணைந்தேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

பாஜகவில் இணைவதற்கு முன் அக்கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராயை அர்ஜுன் சிங் சந்தித்தார். முகுல் ராய் ஒரு காலத்தில் மம்தாவுக்கு வலதுகரமாக திகழ்ந்தவர் ஆவார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close