[X] Close

வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணியை உறுதி செய்தது பாஜக


bjp

  • kamadenu
  • Posted: 15 Mar, 2019 10:23 am
  • அ+ அ-

பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் கடந்த செவ்வாய்கிழமை அசாம் மாநிலம் குவாஹாட்டி வந்தார். தேசிய குடியுரிமை மசோதா தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கூட்டணியில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன் வெளியேறிய அசாம் கன பரிஷத் கட்சியுடன் பேச்சு நடத்தி, அக்கட்சியை மீண்டும் பாஜக கூட்டணிக்கு கொண்டு வந்தார்.

இதேபோல, புதன்கிழமை நள்ளிரவு வரை திரிபுரா, சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் கட்சிகளுடன் ராம் மாதவ் பேச்சு நடத்தினார். இதன் எதிரொலியாக போடோ மக்கள் முன்னணி, திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளன. வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இக்கட்சிகள் இணைந்துள்ளன.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் ராம் மாதவ் கூறுகையில், ‘‘வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தனது கூட்டணியை வெற்றிகரமாக உறுதி செய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் குறைந்தது 22 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றிபெறும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதற்கு வடகிழக்கு மாநிலங்கள் முக்கிய பங்காற்றும்’’ என்று தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close