[X] Close

அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரம்; 3 பேர் சமரச குழுவின் பேச்சு தொடக்கம்


ayodhya

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 11:05 am
  • அ+ அ-

அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சமரசக் குழுவின் பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் பைசாபாத்தில் நேற்று தொடங்கின.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கும் சொந்தம் என்பதில் சமரச பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்தியஸ்த குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையிலான இக்குழுவில் வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். உ.பி. மாநிலம் பைசாபாத்தில் சமரச பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்றும் 8 வாரங்களுக்குள் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை முடிக்க வேண்டும்என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பைசாபாத்தில் சமரசக் குழுவின் பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் நேற்று துவங்கியது.

மத்தியஸ்த குழு முன் அயோத்தி வழக்கின் மனுதாரர்கள் 25 பேர் நேற்று ஆஜராயினர். பைசாபாத்தில் உள்ள அவத் பல்கலைக்கழக வளாகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் நடப்பதாகவும் அந்தப் பகுதியில் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அனுஜ் குமார் ஜா தெரிவித்தார். மத்தியஸ்த குழுவினர் 3 நாட்கள் பைசாபாத்தில் தங்கியிருப்பார்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close