[X] Close

மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சார வியூகம்: பாஜக - சிவசேனா ஆலோசனை


shivsena

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 11:00 am
  • அ+ அ-

உத்தரபிரதேசத்துக்கு அடுத்தபடியாக அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. 

இங்கு மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. பாஜகவும் சிவசேனா கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. பாஜக 25 தொகுதிகளிலும் சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மாநில அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு மும்பையில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் வீட்டுக்குச் சென்றனர். தேர்தலை எப்படி சந்திக்கலாம், எப்படி பிரச்சார வியூகம் வகுப்பது, காங்கிரசுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது பற்றி அவர்கள் ஆலோசித்தனர். வரும் 24-ம் தேதி கோல்ஹாபூர் மாவட்டத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று சிவசேனா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close