[X] Close

நே-பால் அறிவிக்காததால் பரிதாபமாக தோற்ற ஆர்சிபி: “அம்பயரும் விளையாடியதால்” மும்பைக்கு முதல் வெற்றி: கோலி புதிய சாதனை


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 07:25 am
  • அ+ அ-

மகாராஷ்டிரா காங்கிரஸில் மூத்த தலைவராக இருப்பவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல். இவர்தான் மகாராஷ்டிரா பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். இவரது மகன் டாக்டர் சுஜாய் விகே பாட்டீல். இவரும் காங்கிரஸ் கட்சி நிர்வாகியே. இந்நிலையில் நேற்று முன்தினம் சுஜாய், காங்கிரஸிலிருந்து விலகி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இது காங்கிரஸ் தலைமைக்கும், மகாராஷ்டிர காங்கிரஸாருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

60 ஆண்டுகளுக்கும் மேலாக ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் குடும்பத்தார் காங்கிரஸில் இருந்துவருகின்றனர். ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் தந்தை பாலாசாகேப் பாட்டீலும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கினார். மேலும் ஆசியாவின் முதலாவது கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தொடங்கியவர் பாலா சாகேப்பின் தந்தையான விட்டல்ராவ் விகே பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்களது சொந்த ஊரான அகமது நகரில் விகே பாட்டீல் குடும்பத்தாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது.

இந்நிலையில் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், வரும் மக்களவைத் தேர்தலில் அகமது நகரில் சுஜாயை நிறுத்துவதற்காக டிக்கெட் கேட்டிருந்தார். ஆனால் எந்த காரணத்துக்காகவும் அகமதுநகரை நாங்கள் விட்டுத் தரமாட்டோம் என்று காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துவிட்டார்.

இதனால்தான் அதிருப்தியடைந்த சுஜாய், காங்கிரஸிருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளார்.

ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் தந்தையான பாலா சாகேப்புக்கும், சரத் பவாருக்கும் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. அப்போது பவார் காங்கிரஸில் இருந்தார். பகைமை உணர்வு காரணமாக 1990-களில் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி பாலா சாகேப்புக்கு தேர்தலில் டிக்கெட் கிடைக்காமல் செய்துவிட்டார் பவார். இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே பகை உணர்வு அதிகரித்தது.

இந்நிலையில் இந்தத் தேர்தலில் பகைமை உணர்வை பவார்மறந்துவிட்டு சுஜாயை தனது பேரன்போல நினைத்து ஆதரவு தருமாறு சரத் பவாரை, ராதாகிருஷ்ண பாட்டீல் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அகமதுநகர் தொகுதியை விட்டுத் தர முடியாது என்றும் பவார் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இதனால்தான் சுஜாய், பாஜகவில் சேர்ந்தார் என்று தெரிவிக்கின்றனர்.

இதனிடையே ராதாகிருஷ்ண விகே பாட்டீலும் கட்சியிலிருந்து ராஜினாமா செய்வார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால் இதை ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மறுத்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close