[X] Close

உ.பி.யின் முசாபர்நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் அஜித் சிங்


ajit-singh-is-contesting-in-muzaffarnagar-constituency

  • kamadenu
  • Posted: 13 Mar, 2019 13:23 pm
  • அ+ அ-

தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான சவுத்ரி சரண் சிங் 48 ஆண்டுக்கு முன்பு போட்டியிட்டு தோற்ற முசாபர்நகர் தொகுதியில் அஜித் சிங் போட்டியிட உள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் ஆர்எல்டி சார்பில் அக்கட்சித் தலைவர் அஜித் சிங் முசாபர்நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை, ஜாட், குர்ஜார், தலித் மற்றும் முஸ்லிம் வாக்குகள் கணிசமான அளவில் உள்ளன. கடந்த சில தேர்தல்களில் குர்ஜார்களின் வாக்குகள் பாஜகவுக்கு ஆதரவாக பதிவாகி உள்ளன. எனினும் பாஜக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. பாஜகவைச் சேர்ந்த சஞ்சீவ் பாலயன் இந்தத் தொகுதியின் இப்போதைய உறுப்பினராக உள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close