[X] Close

வேட்பாளர்கள் தேர்வு திரிபுரா பாஜக இன்று ஆலோசனை


candidates-are-selected

  • kamadenu
  • Posted: 13 Mar, 2019 13:05 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் திரிபுராவில் உள்ள இரண்டு தொகுதிகளான மேற்கு திரிபுரா மற்றும் கிழக்கு திரிபுராவில் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சி மும்முரமாக உள்ளது. இதற்காக பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் இன்று அகர்தலா செல்கிறார். வேட்பாளர் தேர்வு குறித்தும் பிரசார வியூகம் பற்றியும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

கூட்டணிக் கட்சியான திரிபுரா பூர்வகுடிகள் முன்னணி கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மங்கள் தேபர்மா கூறுகையில், ‘‘ஒரு தொகுதியிலாவதுபோட்டியிட விரும்புகிறோம். எனினும், அரசியலில் சாத்தியமற்றது எதுவும் கிடையாது’’ என்றார். இதனிடையே அக்கட்சியின் நிர்வாகிகளையும் ராம் மாதவ் சந்தித்து பேசுவார் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close