[X] Close

உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம்


second-place-for-india

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 13 Mar, 2019 13:03 pm
  • அ+ அ-

உலக அளவில் ஆயுத இறக்குமதியில் 2014-18-ல் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. இதுகுறித்து ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

2014-18-ல் ஆயுத இறக்குமதியில் சவுதி அரேபியா, உலகில் முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த ஆயுத இறக்குமதியில் இது 12 % ஆகும். இதே காலகட்டத்தில் 9.5 % இறக்குமதியுடன் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஆயுத இறக்குமதியில் இந்தியா நீண்ட காலமாக உலகில் முதலிடம் வகித்துவந்த நிலையில், 2009-13 மற்றும் 2014-18 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ஆயுதங்கள் டெலிவரி ஆவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இந்திய ஆயுத இறக்குமதி 24 % சரிந்தது. இதன் காரணமாக 2014-18-ல் இந்தியா இரண்டாமிடத்துக்கு வந்தது. முதலிடத்தை சவுதி அரேபியா பெற்றது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close