[X] Close

360: அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் தூதுவர்


360

  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 08:22 am
  • அ+ அ-

சித்திரைத் திருவிழா நடைபெற இருப்பதால் மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் தேர்தலை தள்ளிவைக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக் கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

மதுரையைச் சேர்ந்த வழக் கறிஞர் பார்த்தசாரதி, உயர் நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் முதல் வாரம் தொடங்குகிறது. ஏப்.15-ல் மீனாட்சி பட்டாபிஷேகம், ஏப்.17-ல் திருக்கல்யாணம், ஏப்.18-ல் தேரோட்டம், ஏப்.19-ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஏப்.18-ல் மக்களவைத் தேர்தல் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள் ளது.

அன்றைய தினம் மதுரையில் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கும். மாலை 3 மணி வரை பக்தர்கள் கூட்டம் இருக்கும். கள்ளழகர் எதிர்சேவை யும் அன்று நடைபெறுகிறது.

இத்திருவிழாவில் 2 லட்சத்துக் கும் அதிகமானோர் பங்கேற்பர். தேரோட்டம் அன்று தேர்தல் நடைபெற்றால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்கப்படும். எனவே மதுரையில் மட்டும் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close