[X] Close

தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழகம் வரும் முக்கிய பிரமுகர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு


  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 06:38 am
  • அ+ அ-

 

மும்பை, பிடிஐ

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், திடீரென இன்று அறிவித்துள்ளார்.

மூத்த அரசியல்வாதியும், 78 வயதான சரத்பவார், மகாராஷ்டிராவின் தென்மேற்கில் உல்ள மாதா மக்களவைத் தொகுதியில் இருந்து போட்டியிட்ட நிலையில் இந்த முறை களமிறங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியுடன், மக்களவைத் தொகுதிக்கான இடங்கள் குறித்த இறுதிக்கட்ட பேச்சு முடிந்தநிலையில் இந்த அறிவிப்பை சரத்பவார் அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தநிலையில், கடந்த மாதம் தேர்தலில் போட்டியிட விருப்பமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திடீரென தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

புனேயில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் " என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேர் ஏற்கெனவே தேர்தலில் இந்த முறை போட்டியிடுகிறார்கள். ஆதலால், இந்த முறை நான் போட்டியில் இருந்து விலகுவதுதான் சரியான முடிவாக இருக்கும். ஏற்கெனவே நான் 14 முறை தேர்தலில் போட்டியிட்டுவிட்டேன்.

என்னுடைய மகள் சுப்ரியா சுலே, பேரன் பரத் பவார் ஆகியோர் போட்டியிடும் நிலையில் நான் போட்டியிடவில்லை

ஆனாலும், என்னை மாதா தொகுதியில் தொடர்ந்து போட்டியிட வற்புறுத்துகிறார்கள். ஆனால், 15-வது முறையாக அங்கு போட்டியிடுவது சரியல்ல, தோற்றுவிடுவேன் என்ற பயமும் அல்ல.  என்னடைய பேரல் பரத் பவாரை போட்டியிட சொல்கிறார்கள். ஆனால், இன்னும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து முடிவு செய்யவில்லை" எனத் தெரிவித்தார்.

 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close