[X] Close

விமானப்படை தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டதால் அதிருப்தி: பிஹார் காங்கிரஸ் மூத்த தலைவர் விலகல்


air-force-attack

  • kamadenu
  • Posted: 11 Mar, 2019 15:19 pm
  • அ+ அ-

பாகிஸ்தான் தீவிரவாத முகாம் கள் மீதான விமானப்படை தாக்கு தலுக்கு ஆதாரம் கேட்டதால் அதிருப்தியடைந்த பிஹார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வினோத் சர்மா அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார்.

பிஹார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக பொறுப்பு வகித்து வந்த சர்மா, கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்ட சில தினங்களில், பாகிஸ் தானின் பாலகோட் அருகே உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி யது. இதற்கு கட்சித் தலைமை ஆதாரம் கேட்டதுடன், பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதன் மூலம் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களின் உணர்வுகளை கட்சித் தலைமை புண்படுத்தி விட்டது.

இங்குள்ள கட்சித் தொண்டர்களின் மனநிலை குறித்து பல முறை கடிதம் எழுதினேன். ஆனால் இதை பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் விமானப்படை தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டுக் கொண்டிருப்பது குழந்தைத்தன மாகவும் அவமானமாகவும் உள்ளது. ஆதாரம் கேட்பது, ராணு வத்தின் ஒழுக்கத்தை சந்தேகிப்பது போலவும் தீவிரவாதிகளை ஊக்குவிப்பது போலவும் உள்ளது.

மேலும் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் பாதையிலிருந்து விலகுவவது போலவும் இந்த செயல் அமைந்துள்ளது. காங்கிரஸ்காரர்களை பாகிஸ்தான் ஏஜென்ட்டைப் போல கருதுகிறார்கள். காங்கிரஸ்காரர் என கூறிக் கொள்ளவே வெட்கமாக உள்ளது. எனக்கு கட்சியைவிட நாடுதான் முக்கியம் என்பதால், கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸுக்காக பணியாற்றி வந்த நான், கனத்த இதயத்துடன் கட்சியிலிருந்து விலகுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது குறை கூறிவிட்டு விலகியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close