[X] Close

நாட்டை முன்னேற்ற வேறு யாரும் இல்லை: திருமணப் பரிசாக மோடிக்கு வாக்களியுங்கள்


there-is-no-one-to-improve-the-country

  • kamadenu
  • Posted: 11 Mar, 2019 15:03 pm
  • அ+ அ-

‘‘நாட்டை முன்னேற்ற வேறு தலைவர்கள் இல்லை. எங்கள் திருமண பரிசாக மோடிக்கு மீண்டும் வாக்களியுங்கள்’’ என்று பிஹாரில் மணமக்கள் வித்தியாசமான முறையில் அழைப்பிதழ் அச்சிட்டு தந்துள்ளனர்.

பிஹார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ளது சிவான் கலா கிராமம். இங்கு வசிப்பவர் அசோக் சிங். இவரது மகளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதற்காக திருமண அழைப்பிதழ் அச்சிட்டுள்ளார். வழக்கமான முறையில் இல்லாமல், திருமண அழைப்பிதழில் மோடிக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்று அசோக் சிங் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு விநியோகித்து வருகிறார்.

அழைப்பிதழில் உறைக்கு மேலே, ‘‘என் மகளை வாழ்த்தவும், இந்த நாட்டின் நலன் கருதியும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். திருமண பரிசாக நீங்கள் உங்கள் வாக்குகளை மோடிக்கு அளிக்க வேண்டும்’’ என்று அச்சிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அசோக் சிங் கூறும்போது, ‘‘நாட்டின் நலனைத் தவிர இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை. மோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும். ஏனெனில், அவரை விட வேறு சிறந்த தலைவர்கள் இல்லை. மோடி இந்த நாட்டை பற்றி சிந்திக்கிறார். மற்ற தலைவர்கள் அவர்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர்.

குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 15 ஆண்டுகள் அசோக் சிங் பணியாற்றி உள்ளார். இவருடைய மகன் ரவீந்திர சிங்கும், தந்தையைப் போலவே மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ரவீந்திர சிங் கூறும்போது, ‘‘இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்து செல்வதற்கு மோடியால் மட்டுமே முடியும். அதை வேறு எந்தத் தலைவராலும் செய்ய முடியாது’’ என்கிறார்.

வித்தியாசமான இவர்களுடைய திருமண அழைப்பிதழ்தான் பிஹார் மாநிலத்தின் பல பகுதிகளில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close