[X] Close

ஈரானில் வெள்ளம்: 18 பேர் பலி


18

  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 15:16 pm
  • அ+ அ-

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மைக்குச் சற்று குறைவாக இடங்கள் கிடைத்தாலும், மற்ற கட்சிகளின் துணையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உண்டு என்று சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களில் 8 இடங்கள் குறைவாகக் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சாமஜ் தலைமையில் மகாபந்தன் கூட்டணி அமையாவிட்டால், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 300 இடங்களை எளிதாக வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வரும் மக்களவைத் தேர்தலில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய மூன்று கட்சியின் செயல்பாட்டைத் தீவிரமாக பாஜக கண்காணிக்கும்.

ஏனென்றால், இந்த 3 கட்சிகளும் சேர்ந்து ஏறக்குறைய 36 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களையும், பிஜூ ஜனதா தளம் 9 இடங்களையும், தெலங்கானாவில் 17 தொகுதிகளில் 16 இடங்களை டிஆர்எஸ் கட்சியும் வெல்லும் வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த 3 கட்சிகளின் ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணி கிடைத்தால், பெரும்பான்மை பெறுவது மட்டுமின்றி, மக்களவையில் 300 இடங்களைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்துவிடும். ஆதலால், இந்த 3 கட்சிகளையும் பாஜக தீவிரமாக கண்காணிக்கும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 141 இடங்களையும், மற்ற கட்சிகள் 138 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உண்டு. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்கூட்டணி அமையாவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு 139 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 97 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை தனிப்பட்ட முறையில் 86 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.  தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி(ஏஐயுடிஎப்), இடது ஜனநாயக முன்னணி(எல்டிஎப்), எம்ஜிஎப்(மகாபந்தன்), திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தால், 226 இடங்கள் வரை பெறமுடியும்.

பாஜக குறித்த கணிப்பு

உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி பாஜகவுக்கு கடும் சேதத்தை விளைவிக்கும். 80 தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் கடந்த முறை 71 இடங்களைப் பெற்ற பாஜக இந்த முறை 29 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பை பெறும். ஒருவேளை மகாபந்தன் இல்லாவிட்டால்,  72 இடங்களை பாஜக எளிதாகக் கைப்பற்றும்.

பிஹாரில் கடந்த முறை 22 இடங்களில் வென்ற பாஜக இந்த முறை 36 இடங்களைப் பெறும். குஜராத்தில் 26 இடங்களிலிருந்து 24 ஆகக் குறையும், கர்நாடக மாநிலத்தில் 17 இடங்களிலிருந்து 16 ஆக பாஜக சரியும்.

மத்தியப் பிரதேசத்தில் 26 இடங்களிலிருந்து 24 இடங்களாகவும், மகாராஷ்டிராவில் 23 இடங்களிலிருந்து 36 இடங்களை பாஜக கைப்பற்றும். ஒடிசாவில் கடந்த முறை ஒரு இடத்தில் வென்ற பாஜக இந்த முறை 12 இடங்களில் வெல்ல வாய்ப்பு உண்டு. ராஜஸ்தானில் 24 இடங்களில் இருந்து 20 இடங்களாகச் சரியும்.

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் கட்சி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 44 இடங்களை மட்டுமே பெற்றது. இந்த முறை அசாமில் கூடுதலாகப் பெறும். கடந்த முறை அசாமில் 3 இடங்களில் வென்ற காங்கிரஸ் இந்த முறை 7 இடங்களைப் பெறும். சத்தீஸ்கரில் கடந்த முறை ஒரு இடத்தில் வென்ற நிலையில் இந்த முறை 5 இடங்கள் கிடைக்கலாம்.

கேரள மாநிலத்தில் கடந்த தேர்தலைக் காட்டிலும் ஒரு இடம் அதிகமாக 14 இடங்கள் கிடைக்கலாம், கர்நாடகாவில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 9 இடங்களும்,  மத்தியப்பிரதேசத்தில் கடந்த முறை 3 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 5 இடங்களிலும் காங்கிரஸ் வெல்லும்.

மகாராஷ்டிராவில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 4 இடங்களில் வென்ற காங்கிரஸ் இந்த முறை 7 இடங்களைப் பெறும். பஞ்சாபில் 3 இடங்களிலிருந்து 12 இடங்களாகவும், ராஜஸ்தானில் கடந்த முறை ஒரு இடம்கூட பெறாத நிலையில், இந்த முறை 5 இடங்களைக் காங்கிரஸ் பெறும். தமிழகத்தில் கடந்த முறை எந்த இடத்திலும் வெல்லாத காங்கிரஸ் கட்சி இந்த முறை 4 இடங்களைக் கைப்பற்றும், உ.பியில் 4 இடங்களைப் பெறும்.

ஒட்டுமொத்தமாக வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 31.1 சதவீதம் வாக்குகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 30.9 சதவீத வாக்குகளும் பெறும். இதர கட்சிகள் சேர்ந்து 28 சதவீதம் வாக்குகளைப் பெறும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close