[X] Close

நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர் மாற்றம் ஏன்?- புதிய வேட்பாளராக மைக்கேல் ராயப்பன் அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 08:30 am
  • அ+ அ-

ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட  தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்த இளைஞரை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த மாதம் 14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில், அவந்திபோரா சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. காரில் வெடிபொருட்கள் நிரப்பி பேருந்து மோதியதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.

அதன்பின் விசாரணையை தீவிரப்படுத்திய தேசிய விசாரணை முகமை அதிகாரிகள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், அதன் உரிமையாளர்களைக் கண்டுபிடித்தனர். தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அதில் அகமது தார் தாக்குதல் நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் அந்த காரை வாங்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில்,  புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரை தேசிய விசாரணை முகமை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த  தீவிரவாதி முடாசிர் அகமது கான் என்கிற முகமது பாய் என்பது தெரியவந்தது. எங்களுக்கு கிடைத்த அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, ஒன்று சேர்த்ததில் இந்த தாக்குதலுக்கு அகமது கான் மூளையாக இருந்துள்ளார் என்பதை கண்டுபித்துள்ளோம்.

புல்வாமா மாவட்டம், டிரால் பகுதியில் உள்ள மிர் மொஹாலா பகுதியைச் சேர்ந்த 23வயதான அகமது கான், பட்டப்படிப்பு முடித்து, ஐடிஐ படித்தவர். புல்வாமா தாக்குதலுக்கு தேவையான காரை விலைக்கு வாங்கி, அதை அதில் அகமதுவுக்கு வழங்கியவர் அகமதுகான்.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு அடிப்படை கட்டமைப்பு பணிகளில் அகமது கான் பணியாற்றியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டிலேயே ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் சேர்ந்த அகமது கான், அந்த அமைப்பின் மூத்த உறுப்பினர் நூர் முகமது தாந்தரேயுடன் பழகினார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாத செயல்கள் அதிகம் நடைபெற நூர்முகமது முக்கியக் காரணமாக இருந்தவர்.

ஆனால், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையால் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நூர் முகமது கொல்லப்பட்டார். நூர் கொல்லப்பட்டதும், கடந்த 2018, ஜனவரி 14-ம் தேதி அகமது கான் தலைமறைவானார்.

ஆனால், தலைமறைவாக வாழ்ந்து வந்த அகமது கானுடன், தற்கொலைப்படைதாக்குதல் நடத்திய தீவிரவாதி அதில் அகமது அடிக்கடி தொடர்பில் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு, சன்ஜவானில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர், இந்த தாக்குதலில் அகமது கானுக்குதொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், காஷ்மீரின் லேத்போரா சிஆர்பிஎப் முகாம் மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலிலும் அகமது கானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும், தெற்கு காஷ்மீரின் பீஜ்பேஹ்ரா பகுதியைச் சேர்ந்த சஜாத் பாட் என்பவர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் தொடர்ந்து இருந்து வருகிறார் என்பதையும் கண்டுபிடித்துள்ளோம் . இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close