[X] Close

மிசோரம் மாநில ஆளுநராக ஜகதீஷ் முகி பதவியேற்பு


jagadish-muki

  • kamadenu
  • Posted: 10 Mar, 2019 08:51 am
  • அ+ அ-

மிசோரம் ஆளுநராக இருந்த கும்மணம் ராஜசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஏற்றுக்கொண்டார். மேலும் இடைக்கால ஏற்பாடாக அசாம் ஆளுநர் ஜகதீஷ் முகியை கூடுதலாக மிசோரம் ஆளுநர் பொறுப்பு வகிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் மிசோரம் ஆளுநராக ஜகதீஷ் முகி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கான விழா தலைநகர் அய்சாலில் உள்ள ராஜ்பவனில் எளிமையான முறையில் நடைபெற்றது. குவாஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதி நெல்சன் சைலோ அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்புக்கு பிறகு ஜகதீஷ் முகி கூறும்போது, “முதல் லோக் ஆயுக்தாவின் தலைவராக சி.லால்சாதாவுக்கு வரும் திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளேன்” என்றார்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான லால்சாதா, மிசோரம் மாநிலத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள லோக் ஆயுக்தாவின் தலைவராக கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

மிசோரம் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் வாரத்தில் தொடங்கவுள்ளது. இதில் முதல் நாளான செவ்வாய்க்கிழமை பேரவையில் ஆளுநர் ஜகதீஷ் முகி உரையாற்றவுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close