[X] Close

பாலகிருஷ்ண ரெட்டி தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைப்பு


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 05:46 am
  • அ+ அ-

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் ஜம்மு-காஷ்மீரிலிருந்து செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி ஜம்மு-காஷ்மீர் அமைப்புக்கு நெருங்கியதொடர்பு இருந்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

ஜம்மு - காஷ்மீரிலிருந்து செயல்பட்டு வரும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பானது டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யுடன் தொடர்ந்து அந்த அமைப்பு தொடர்பில் உள்ளது. மேலும் காஷ்மீர் இளைஞர்களுக்கு ஆயுதம் வழங்குதல், பயிற்சி, ஆயுதங்களை கையாளுதல் போன்றவற்றை ஐஎஸ்ஐ வழங்குவதை உறுதி செய்தும் வருகிறது இந்த அமைப்பு.

மத்திய புலனாய்வுத்துறை தந்த தகவல்களின்படி காஷ்மீரிலுள்ள பள்ளிகளில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை மாணவர்களிடையே உருவாக்கும் விதத்தில்இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் இளைஞர் பிரிவு (ஜாமியத்-உல்-துல்பா) அமைப்பு செயல்படுகிறது. இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் சேர்த்து அவர்களை புனிதப் போருக்கு தயார்படுத்துவதிலும் இந்த அமைப்பு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

அண்மையில் இந்த அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது. முதன்முறையாக 1975-லும், அதன்பிறகு 1990-லும் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. தற்போது 3-வது முறையாக கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மத்திய அரசால் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டது.

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு, காஷ்மீர் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள பயத்தை மூலதனமாகப் பயன்படுத்தி வருகிறது ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு. அதன்மூலம் உள்ளூரிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நிதியைத் திரட்டி அதை தீவிரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close