[X] Close

கொல்கத்தாவில் 1,000 கிலோ வெடிமருந்து பறிமுதல்: போலீஸ் தீவிர விசாரணை


vedi

  • kamadenu
  • Posted: 10 Mar, 2019 08:48 am
  • அ+ அ-

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் 1,000 கிலோ வெடிமருந்தை போலீஸார் கைப்பற்றினர். இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் சட்டவிரோதமாக வெடிமருந்துகள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், கொல்கத்தா நகரின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் நேற்று அதிகாலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பி.டி. சாலையில் வந்த சரக்கு லாரியை போலீஸார் வழிமறித்து சோதனை செய்தனர். இதில், அந்த லாரியில் சுமார் 1,000 கிலோ 'பொட்டாசியம் நைட்ரேட்' வெடிமருந்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த லாரியின் ஓட்டுநர், உதவியாளர் ஆகியோரையும் கைது செய்துள்ள போலீஸார், இந்த வெடிமருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். -

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close