[X] Close

கட்சி தாவிய காங்கிரஸ் எம்எல்ஏ.க்களுக்கு குஜராத் பாஜக அரசில் அமைச்சர் பதவி


congress-leaders

  • kamadenu
  • Posted: 10 Mar, 2019 08:45 am
  • அ+ அ-

குஜராத்தில் காங்கிரஸ் அதிருப்திதலைவர்கள் இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தவல்சிங் ஜடேஜா பாஜகவுக்கு அணி மாறினார்.

தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் குஜராத்தின் மானாவ்தர் தொகுதி எம்எல்ஏ ஜவஹர் சாவ்டா சில நாட்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.

இந்தப் பின்னணியில் ஜவஹர் சாவ்டா குஜராத் அமைச்சரவையில் நேற்று கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார். தவல்சிங் ஜடேஜா இணையமைச்சராக பதவியேற்றார். இவர்களோடு பாஜக மூத்த தலைவர் யோகேஷ் படேல் இணையமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். குஜராத் ஆளுநர் ஓ.பி.கோலி, மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அல்பேஷ் தாகோர் பாஜகவில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அவர் கூறியபோது, "நான் அமைச்சரானால் எனது சமுதாய மக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற முடியும் என்று கருதினேன். ஆனால் என் சமுதாய மக்கள் நான் காங்கிரஸில் நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப காங்கிரஸில் நீடிப்பேன்" என்று தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close