[X] Close

ஆ.ராசாவின் சொத்துப் பட்டியலில் மாற்றமில்லை


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 17:24 pm
  • அ+ அ-

ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை எல்லை பாதுகாப் புப் படை வீரர்கள் நேற்று சுட்டு வீழ்த்தினர்.

போர் பதற்றம் நீடிப்பதால் பாகிஸ் தான் எல்லையை ஒட்டிய குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் மாநில எல்லைப் பகுதிகளில் முப்படை களும் உஷார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.

பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட் டத்தில் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக கடந்த மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் 50 கி.மீ. தூரத்துக்கு பறந்த இந்திய போர் விமானங்கள், 3 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்களை குண்டுகளை வீசி அழித்தன. இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என மத்திய அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 27-ம் தேதி பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்கள் காஷ்மீர் எல்லைக் குள் அத்துமீறி நுழைந்தன. அந்த விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்தன. இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இதற்கான ஆதாரம் இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அத்துமீறல்

இந்திய விமானப் படை தாக்கு தலைத் தொடர்ந்து காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவ நிலை களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி குஜராத்தின் கட்ச் பகுதியிலும் கடந்த 4-ம் தேதி ராஜஸ்தானின் பிகானிர் எல்லைப் பகுதியிலும் அத்துமீறி பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானங்களை இந்திய விமானப் படை சுட்டு வீழ்த்தியது.

இந்நிலையில் ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் உளவு விமானம் ஒன்று நேற்று அதிகாலை 5.40 மணிக்கு நுழைந்தது. இதையடுத்து உஷாரான எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தினர்.

ராணுவ தளபதி ஆய்வு

போர் பதற்றம் நீடிப்பதால் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் ராணுவம், கடற்படை, விமானப் படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் சில நாட்களுக்கு முன்பு காஷ்மீர் எல்லைப் பகுதியில் போர் ஆயத்த நிலை குறித்து ஆய்வு நடத்தி னார். ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தலைமையகம் அமைந்துள்ள ஹரி யாணாவின் சண்டிமந்திருக்கு அவர் நேற்று சென்றார். அங்கு பாகிஸ் தானை ஒட்டிய பஞ்சாப் மாநிலத் தின் எல்லைப் பகுதி பாதுகாப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆய்வு நடத்தினார்.

சர்வதேச நாடுகள் அறிவுரை

அணு ஆயுத நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா தரப்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளையும் அறிவுறுத்தியுள்ளன.

சீன வெளியுறவுத் துறை அமைச் சர் வாங் யீ இதுபற்றி நேற்று முன்தினம் கூறும்போது, “இந்தியாவும் பாகிஸ்தா னும் அமைதி காக்க சீனா வலியுறுத்தி வருகிறது. போர் பதற்றத்தை தணித்ததில் சீனா முக்கிய பங்காற்றி உள்ளது” என்று தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவ மூத்த தளபதி ஜோசப் வோட்டல் கூறும்போது, “பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளால்தான் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்படுகிறது. இதை தடுக்க தீவிரவாத அமைப்புகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் முன்னணி நாளி தழான ‘நியூயார்க் டைம்ஸ்’ தலையங் கத்தில் “தீவிரவாத அமைப்புகளை அழிக்க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதுதான் பிரச்சினைக்கு காரணம்” என்று பகிரங்கமாக குற்றம்சாட்டப் பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close