[X] Close

கூகுள், இனி காரின் வேகத்தையும் கட்டுப்படுத்தும்!


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 11:41 am
  • அ+ அ-

 

புதுடெல்லி பிடிஐ

பாகிஸ்தானில் பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் குறிவைத்து தகர்க்கப்பட்டது உண்மைதான் ன்று மத்திய வெளியுறவுத்துறை இன்று விளக்கம் அளித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படை, பாலகோட்  பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 350 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டனர் என்று தெரிவித்து. ஆனால், பாகிஸ்தான் அரசும், ராணுவமும் இந்தியாவின் விமானப்படை தாக்குதலில் எந்தவிதமான கட்டமைப்பும் சேதமடையவில்லை, உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. வனப்பகுதியில் குண்டு வீசிவிட்டு இந்திய ராணுவம் சென்றது, இதனால் 19 மரங்கள் அழிந்துவிட்டன என்று பாகிஸ்தான் ராணுவத்தினர் தீவிரவாதிகள் யாரும் இறக்கவில்லை என்று மழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் இன்று ஊடங்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 பைஸன் ரக விமானத்தில் பயணித்த விமானி அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான எப்-16 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தியுள்ளார். அதற்கான நேரடி சாட்சிகளும், மின்னணு ரீதியான ஆவண ஆதாரங்களும் இருக்கின்றன.

எப்-16 ரக விமானத்தில் பயன்படுத்தப்பட்ட ஏம்ஆர்ஏஏம் ரக ஏவுணை குறித்த விவரங்களை நாங்கள் பாகிஸ்தான் ராணுவத்திடம் அளித்துள்ளோம். அந்த ஏவுகணை எப்-16 விமானத்தில் மட்டுமே பயன்படுத்தக்கூடியது.

நம்முடைய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் சென்று குறிப்பிட்ட இலக்கை குறிவைத்து அழித்துவிட்டு வந்துள்ளதில் மாற்றம் இல்லை. எல்லை கடந்து நடக்கும் தீவிரவாதத்துக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்.

இந்திய விமானப்படை ஒருவிமானத்தை மட்டுமே இழந்துள்ளது, மற்ற விமானங்கள் பாதுகாப்பாக வந்தன, பாகிஸ்தானால் நமது விமானங்களை தாக்க முடியவில்லை. நம்முடைய 2-வது விமானத்தை தாக்கி வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. அதற்குரிய ஆதாரங்கள் இருந்தால், ஏன் பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச அளவில் அதை வெளியிட மறுக்கிறது.

புல்வாமா தாக்குதலிலிருந்து சர்வதேச சமுதாயம் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்து வருகின்றது. புதிய பாகிஸ்தான், புதிய சிந்தனை என்று கூறிவரும் பாகிஸ்தான் அரசு, ஏன் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கும் எதிராக புதிய நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது.

பாகிஸ்தான் மண்ணில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு செயல்படவில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருவது துரதிர்ஷ்டமாகும். ஜெய்ஷ் இ முகமது அமைப்பு புல்வாமா தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கூறுகிறார். அப்படியென்றால், ஜெய்ஷ் இ முகமது அமைப்பைப் பாகிஸ்தான் அரசு பாதுகாக்கிறதா.

ஆனால், பாகிஸ்தான் மண்ணில் எந்தவிதமான இடையூறும் இன்றி தீவிரவாத குழுக்கள் தங்கள் செயல்களை நடத்தி வருகிறார்கள்.

தங்கள் மண்ணில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் உறுதியான, நம்பத்தகுந்த, நிலையான நடவடிக்கையைப் பாகிஸ்தான் எடுக்க வேண்டும்.

பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத பயிற்சி முகாம்கள் செயல்பட்டுவந்தது ஐ.நா. சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று தலைமறைவாக இருக்கும் நீரவ் மோடியை இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இங்கிலாந்தின் லண்டனில் நகரில் நீரவ் மோடி இருந்து வருவது எங்களுக்குத் தெரியும். அவரை நாடு கடத்துவது குறித்து இங்கிலாந்து அரசிடம் பேசி வருகிறோம்.

இவ்வாறு ராவேஷ் குமார் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close