[X] Close

''இளைஞர்கள்தான் பேட்டரி; அனிதாதான் சுவிட்ச்'' - கோவையில் கமல் பேச்சு


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 11:25 am
  • அ+ அ-

நீரவ் மோடியை லண்டனின் தி டெலிகிராஃப் பத்திரிகையாளர் பேட்டிகண்ட விதம் நம்மூர் பத்திரிகையாளர்களுக்கு நல்லதொரு பாடம் எனக் கூறியிருக்கிறார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி பண மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடி லண்டனில் வெஸ்ட் என்ட் பகுதியில் 80 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள ஒரு 3 படுக்கை அறை கொண்ட சொகுசு குடியிருப்பில் வசிப்பதாக தி டெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அந்த வீடியோ பேட்டியை பகிர்ந்துள்ள ஒமர் அப்துல்லா, டெலிகிராஃப் பத்திரிகையாளர் எடுத்த பேட்டியை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.

மேலும், "இது நமது பத்திரிகையாளர்கள், தலைப்புச் செய்திகள் பின் ஓடுபவர்களுக்கு ஒரு பாடம். திடீரென்று ஒரு நபரை அவரால் கோரப்படாதபோது பேட்டி எடுக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பாடம்.

கூச்சல் இல்லை, நீரவின் தனிநபர் சுதந்திரத்தை அத்துமீறவில்லை, அவரது முகத்தில் மைக்கை இடிக்கவில்லை, பதில்களைப் பெறுவதற்கான கண்ணியமான முயற்சி" எனப் பதிவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் மிக் பிரவுன் எடுத்த பேட்டி அடங்கிய வீடியோவில், நீரவ் மோடி முகத்தில் மீசையுடன், ரூ.9 லட்சம் மதிப்புள்ள ஆஸ்ட்ரிச் கோட்சூட் அணிந்து காணப்படுகிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close