[X] Close

பங்கு விலக்கலில் எதிரி பங்குகளை விற்று ரூ. 700 கோடி திரட்டிய அரசு: 2-ம் முறையாக இலக்கை எட்டி சாதனை


700-2

  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 07:35 am
  • அ+ அ-

‘‘காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவோம். ஒடிசாவில் ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு இலவச கல்வி அளிப்போம்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள ஜேபோர் நகரில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று பெண்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துரையாடிய ராகுல் காந்தி கூறியதாவது:பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசரதேவை உள்ளது. அதன்மூலம்பெண்களுக்கு அதிகாரமளித்தலை உறுதி செய்ய வேண்டும். ஒடிசா போன்ற மாநிலங்களில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதவை நிறைவேற்றுவோம்.

ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு இலவச கல்வி அளிப்போம். அது பொறியியல் துறையாகட்டும், மருத்துவத் துறையாகட்டும். அனைத்துக் கல்வியும் இலவசமாக அளிப்போம். மேலும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பொறுத்துக் கொள்ள மாட்டோம். பாதிக்கப்படும் பெண்களுக்கு விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்போம். உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக அமைச்சர் ஒருவர் பெண்ஒருவரை பலாத்காரம் செய்ததாகபுகார் எழுந்தது. ஆனால், பிரதமர்மோடி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார். இது துரதிருஷ்டவசமானது.

பெண்களுக்கு எதிரான கொடுமை அல்லது பலாத்கார சம்பவங்கள் நடந்தால், அந்த நேரத்தில் பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் தங்கள் கருத்துகளை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

மோடி மீது புகார்

நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கூறிய பொய்களை விட, அதிகமான பொய்களைக் கூறியவர் பிரதமர் மோடிதான். மற்ற எல்லோரையும் விட இந்த நாட்டை தவறான பாதையில் வழிநடத்தி செல்பவர் மோடி.

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் வேதனை, பெண்களுக்கு எதிரான கொடுமை உட்பட பல வகைகளில் தவறானகொள்கைகளை மோடி பின்பற்றுகிறார். இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவில்லை. அது வன்முறைக்கு வித்திடுகிறது. வெறுப்புணர்வை தூண்டுகிறது. மதுவுக்கு அடிமையாக்குகிறது. உண்மைகளை சந்திக்காத வரையில் உங்களால் (மோடி) பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. ஆனால், உண்மையைச் சந்திக்க மோடி விரும்பவில்லை.

கோராபுட் நகரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உள்ளது. ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் எச்ஏஎல் நிறுவனத்துக்கு பிரதமர் மோடி வாய்ப்பளிக்கவில்லை. அந்த வாய்ப்பை அனில் அம்பானிக்கு கொடுத்துவிட்டார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. அந்தப் பணம் எச்ஏஎல் நிறுவனத்துக்கு வரவேண்டியது.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை. ஒடிசாவில் நாள்தோறும் 12 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். ஆனால், ஆண்டுக்கு 7 பெண்களுக்கு மட்டுமே நீதி கிடைக்கிறது. இந்தநிலை கடந்த நான்கைந்து ஆண்டுகளாக மேலும் மோசமடைந்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்புக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close