[X] Close

சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் நிதிநிலையை ஆராய கூடுதல் அதிகாரம் தேவை: சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் கோரிக்கை


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 07:29 am
  • அ+ அ-

டிடிவி தினகரனுக்கு எதிரான ‘இரட்டை இலை’ லஞ்ச வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சின்னமான ‘இரட்டை இலை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்திருந்தபோது இச்சின்னத்தை சசிகலா அணிக்கு பெறுவதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் டிடிவி தினகரன் முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். சுகேஷ் சந்திரசேகரிடம் கைப்பற்றப்பட்ட பணம், டிடிவி தினகரன், கணக்கில் வராத வழியில் இடைத்தரகர்கள் மூலம் கொடுத்தனுப்பிய பணம் என்று டெல்லி போலீஸார் குற்றம் சாட்டியிருந்தனர்.

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ‘இரட்டை இலை’ சின்னத்தை பெற முயற்சி செய்ததாகவும், கூட்டுச்சதி, ஆவணங்களை அழித்தல் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் தினகரன் மீது கடந்த ஜூலை மாதம் 701 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை தினகரன் உள்ளிட்டோர் மறுத்த நிலையில், அவர்களது வாதத்தை நிராகரித்த டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ், குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வழக்கு விசாரணையை துவங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், தினகரன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிறப்பு விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இம்மனு, நீதிபதி சுனில் கவுர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்றம், தினகரன் தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்கும்படி டெல்லி போலீஸாருக்கும் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 20-ம் தேதி பட்டியலிடும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close