[X] Close
 

ஜீன்ஸ் போடக்கூடாது; செல்போனுக்கு தடா: ஹரியாணா கிராமத்தில் இளம் பெண்களுக்கு கெடுபிடி


haryana-village-bans-girls-from-using-mobiles-wearing-jeans

  • பாரதி
  • Posted: 18 Apr, 2018 16:06 pm
  • அ+ அ-

ஹரியாணா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் இளம் பெண்கள் ஜீன்ஸ் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் வைத்துக்கொள்ளவும் அங்கு பெண்களுக்கு அனுமதியில்லை.

காரணம் பெண் பிள்ளைகள் ஜீன்ஸ் அணிந்தால், செல்போன் பயன்படுத்தினால் யாருடனேனும் காதல் வயப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற வாய்ப்பிருக்கிறதாம். அதன் காரணமாகவே இசாஹிபூர் கேதி கிராமத்தின் பஞ்சாயத்துப் பெரியவர்கள் இந்தத் தடை உத்தரவை விதித்துள்ளனராம்.

இது குறித்து கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பிரேம் சிங் கூறும்போது, "எங்கள் கிராமத்தில் பெண் பிள்ளைகள் ஜீன்ஸ் அணியத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் செல்ஃபோன்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றால் அவர்கள் சீரழிந்துவிடுவார்கள் என்பதைக் காட்டிலும் அவர்களுக்கு இவை பொருந்தவில்லை என்பதாலேயே நாங்கள் தடை உத்தரவு போட்டிருக்கிறோம்" என்றார்.

இது குறித்து அந்த ஊர் இளம் பெண்கள், "இது ஓர் ஆணின் பார்வையில் எடுக்கப்பட்ட முடிவு. இது மிகவும் தவறானது. ஒரு பெண்ணின் மாண்பை அவள் அணியும் உடையை வைத்து எப்படி சோதிக்க முடியும்?" என ஆவேசமாகக் கேட்டனர்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close