[X] Close
 

மனைவியைக் கட்டித் தொங்கவிட்டு அடித்த கணவர்: வைரலான வீடியோ; வழக்கு பதிந்த போலீஸ்


up-man-hung-wife-from-ceiling-beat-her-sent-video-to-in-laws-for-dowry

  • பாரதி
  • Posted: 17 Apr, 2018 08:36 am
  • அ+ அ-

ரூ.50,000 வரதட்சனைக்காக கட்டிய மனைவியை மேற்கூரையில் கட்டித் தொங்கவிட்டு அவரை பெல்ட்டால் அடித்து உதைத்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

உ.பி. மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவரை அவரது கணவர் கட்டிவைத்து அடித்து உதைத்து அதை வீடியோவாக எடுத்து மனைவியின் சகோதரருக்கு அனுப்பியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "எனது கணவர் என் பிறந்தவீட்டாரிடமிருந்து ரூ.50,000 வரதட்சனையாகப் பெற்றுவர வேண்டும் என வற்புறுத்தினார். ஆனால், நான் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டேன். இந்நிலையில், அவர் எனது துப்பாட்டைவைக் கொண்டு எனது கைகளைக் கட்டி என்னை உத்திரத்தில் தொங்கவிட்டார். பின்னர் 3 முதல் 4 மணி நேரம் வரை என்னை அவரது பெல்ட்டால் அடித்துத் துவைத்தார். அதை வீடியோவாக பதிவு செய்து எனது சகோதரருக்கு அனுப்பினார். அவர் கேட்டத் தொகையைத் தராவிட்டால் இது போன்ற சித்ரவதை தொடரும் என மிரட்டினார். நான் சிறிது நேரத்தில் மயங்கிவிட்டேன்.
எனக்கு கல்வியறிவு இல்லை. அதனால்தான் நான் இப்படி வேதனைப்பௌகிறேன். எனது வாழ்க்கையே சீரழிந்துவிட்டது" என்றார்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, "பெண் ஒருவரை கட்டி வைத்து ஆண் ஒருவர் அடித்துத் துன்புறுத்தும் வீடியோ வைரலானது. அதைப் பார்த்த நாங்கள் சம்பந்தப்பட்ட அந்த நபரைத் தேடினோம். பெண்ணைத் தாக்கிய நபரும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைக் கைது செய்யும் பணியை முடுக்கிவிட்டிருக்கிறோம். அவர்கள் மீது வரதட்சனைக் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close