[X] Close
 

நல்ல வேளை அவளைக் கொன்றுவிட்டார்கள்.. அருவருக்கத்தக்க கருத்து தெரிவித்த வங்கி அதிகாரி


good-she-was-killed-banker-loses-job-after-comment-on-kathua-rape-case

  • பாரதி
  • Posted: 14 Apr, 2018 12:26 pm
  • அ+ அ-

காஷ்மீர் சிறுமியின் படுகொலை குறித்து அருவருக்கத்தக்க கருத்து தெரிவித்த தனியார் வங்கி அதிகாரிக்கு சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்தனர்.

அந்த 8 வயது சிறுமியின் பலாத்கார சம்பவத்தை நினைத்து நினைத்து.. இத்தேசத்தில் மனசாட்சியுள்ளவர்கள் அனைவரும் கதறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் வங்கியில் துணை மேலாளராக பணிபுரியும் விஷ்ணு நந்தகுமாரால் மட்டும், கதுவா சம்பவம் குறித்து அப்படி ஒரு அருவருக்கத்தக்க கருத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர முடிந்திருக்கிறது.

அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "நல்ல வேளை அவளை இந்த இளம் வயதிலேயே கொன்றுவிட்டார்கள். இல்லாவிட்டால் அவள் வளர்ந்து இந்தியா மீது குண்டுகள் வீசிக் கொண்டிருப்பாள்" எனக் கூறியிருந்தார். 
அவரது இந்தக் கருத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ந்து போயினர். வெறுப்பைப் பரப்பும் அந்த பதிவுக்கு எதிர்ப்புகள் வலுத்தன. ட்விட்டரில் #Dismissyourmanager ட்ரெண்டாகத் தொடங்கியது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் நேற்று மாலை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதில், "விஷ்ணு நந்தகுமாரை நாங்கள் ஏப்ரல் 11-ம் தேதியே பணி நீக்கம் செய்துவிட்டோம். பணியில் திறமையற்றவராக இருந்ததால் பணி நீக்கம் செய்துவிட்டோம். இப்படிப்பட்ட துண்பத்துக்குப் பிறகு வங்கியின் முன்னாள் ஊழியராகவே இருந்தாலும் அவர் தெரிவித்த கருத்து கடும் கண்டனத்துக்குரியது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close