[X] Close
 

பெண்களுக்கு எதிரான குற்றங்களால் என் மனம் நொந்துகிடக்கிறது: ராகுல் ட்வீட்


rahul-gandhi-leads-midnight-vigil-in-delhi-against-rising-incidents-of-rape

படம்: சுஷில் குமார் வர்மா

  • பாரதி
  • Posted: 13 Apr, 2018 10:05 am
  • அ+ அ-

"நாட்டில் நடைபெறும் பெண்குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் என் மனம் தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியனின் மனத்தைப் போலவும் நொந்து கிடக்கிறது" என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நள்ளிரவு டெல்லியில் மெழுகுவர்த்தி ஏதிர்ப் பேரணியாகச் சென்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ., ஒருவரால் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தையும் கண்டித்தும் ராகுல் காந்தி நள்ளிரவில் பேரணி மேற்கொண்டார்.

அவருடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் பேரணியில் கலந்து கொண்டார்.

அக்பர் சாலையில் இருந்து இந்தியா கேட் வரை அவர்கள் மவுனமாக மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர்.
பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி, "நாங்கள் இங்கு ஒன்று கூடியிருப்பது தேசத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றங்களைத் தடுப்பதற்காகவே. இது தேசிய பிரச்சினை. அரசியல் பிரச்சினையல்ல" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close