[X] Close

மீண்டும் சர்வதேச பொருளாதார நெருக்கடி: நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் பால் கிரக்மன் எச்சரிக்கை


paul-grugman

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 10:56 am
  • அ+ அ-

விரைவில் பெரிய அளவிலான சர்வதேச பொருளாதார நெருக்கடி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் பால் கிரக்மன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துபாயில் நடந்த உலக அரசுகள் மாநாட்டில் பேசியபோது இதனை அவர் கூறினார். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான பல்வேறு காரணிகள் உள்ளதாகக் கூறிய அவர், அதற்கு பொருளாதார கொள்கை வகுப்பாளர்கள் தயாராக வேண்டும் என்றார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “சர்வதேச அளவில் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் காத்திருக்கின்றன. அவையெல்லாம் சேர்ந்து பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடியை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. எப்போது நெருக்கடி வரும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டோ, அடுத்த ஆண்டோ வர வாய்ப்புள்ளது.

அப்படி நெருக்கடி வந்துவிட்டால் அதிலிருந்து தப்பிக்கவே முடியாத சூழலில் நாம் இருக்கிறோம். ஏனெனில், எந்தவொரு நெருக்கடியையும் சமாளிக்கும் திட்டங்கள் நம்மிடம் இல்லை. கொள்கை வகுப்பாளர்கள் யாரும் நெருக்கடியைச் சமாளிக்கக்கூடிய கொள்கைகளை வகுக்கவில்லை” என்றார்.

மேலும், நாடுகளின் மத்திய வங்கிகளுமே கூட சில நேரங்களில் நெருக்கடியை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் முழிக்கும் நிலைதான் இங்கு உள்ளது என்றார். நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான திட்டங்களை வகுப்பதில் பெரும்பாலும் மெத்தனமாகவே இருக்கிறோம் என்று எச்சரித்தார். உலகம் அடுத்த அழுத்தத்தைச் சந்திப்பதற்கு முன்பே தொழில்துறையினரும், கொள்கையாளர்களும் அதற்கான தீர்வை நோக்கி நகர வேண்டும் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close