[X] Close

4ஜி சேவையில் ஜியோவுக்கு முதலிடம்


jio

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 10:55 am
  • அ+ அ-

இணைய சேவை தொடர்பான தரச்சான்றுகளை வழங்கும் சர்வதேச அமைப்பான ஊக்லா 4ஜி இணைய சேவையில் முதலிடத்தை ரிலையன்ஸ் ஜியோவுக்கு வழங்கியுள்ளது.

ஜியோ 4ஜி சேவை எளிதில் கிடைக்கும் வகையில் இருப்பதால் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜியோ 4ஜி சேவை 98.8 சதவீதம் எளிதில் கிடைக்கும் வகையில் உள்ளது.

இதையடுத்து இரண்டாம் இடத்தில் ஏர்டெல் 90 சதவீதத்துடனும், மூன்றாம் இடத்தில் வோடபோன் 84.6 சதவீதத்துடனும், நான்காம் இடத்தில் ஐடியா 82.8 சதவீதத்துடனும் உள்ளன. அதேசமயம் 4ஜி சேவையின் வேகத்தில் ஏர்டெல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதன் இணைய வேகம் விநாடிக்கு 11.23 மெகா பைட் (எம்பிபிஎஸ்) என்ற அளவில் உள்ளது. இரண்டாம் இடத்தில் வோடபோன் 9.13 எம்பிபிஎஸ் வேகத்தில் உள்ளது. மூன்றாம், நான்காம் இடங்களில் ஜியோவும், ஐடியாவும் உள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close