[X] Close

மம்தாவை கிண்டல் செய்து போஸ்டர்கள்: ஜனநாயக இளைஞர்கள் அமைப்பு ஏற்பாடு


mamata-banaerjee

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 10:34 am
  • அ+ அ-

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தைக் கிண்டல் செய்து டெல்லியில் பிரச்சார போஸ்டர்களை ஜனநாயக இளைஞர்கள் அமைப்பு (யூத் ஃபார் டெமாக்ரசி) வைத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ் குமாரைவிசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்தது. ஆனால் அவர் மறுத்ததால் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா சென்று கைது செய்ய முயன்றனர். இதனால் கோபமடைந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் நிலையம் முன்பு 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்.

இதனிடையே உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ்குமார் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி தனது போராட்டத்தை கைவிட்டார். இந்நிலையில் ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கோபமடைந்துள்ள மம்தா பானர்ஜி மீண்டும் தர்ணா போராட்டத்தை டெல்லியில் நேற்று நடத்தினார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜியின் இந்தப் போராட்டத்தைக் கிண்டல் செய்து டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஜனநாயக இளைஞர்கள் அமைப்பு வைத்துள்ளது.

அந்த போஸ்டரில் “சிரியுங்கள்… மம்தா சகோதரி… நீங்கள் ஜனநாயகத்தில்தான் இருக்கிறீர்கள்” என்று எழுதப்பட்டுள்ளது. மற்றொரு போஸ்டரில் “சகோதரி. நீங்கள் பேரணியில் பேசப்ப போவதை யாரும் இங்கு தடுக்கப் போவதில்லை” என்றும் எழுதியுள்ளனர். மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க அனுமதி தராததை கிண்டல் செய்யும் விதமாக இந்த போஸ்டர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த போஸ்டர்கள் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close