[X] Close

எடியூரப்பாவுக்கு குமாரசாமி பகிரங்க சவால்


kumarasamy-eddiyurappa

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 10:33 am
  • அ+ அ-

கர்நாடகாவில் மஜத எம்எல்ஏ நாகன கவுடாவிடம் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஆடியோவை முதல்வர் குமாரசாமி அண்மையில் வெளியிட்டார். இதை விசாரிக்க சட்டப்பேரவைத் தலைவர் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏக்கள் நேற்று சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை முடங்கியது.

இதைத் தொடர்ந்து முதல்வர் குமாரசாமி பேசுகையில், ‘‘எடியூரப்பா எங்கள் கட்சி எம்எல்ஏ ஒருவரை 25 முறை தொலைபேசியில் அழைத்துள்ளார். பாஜகவுக்கு வந்தால் ரூ. 20 கோடியும் அமைச்சர் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இவ்வளவு துணிச்சலாக ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் இறங்கிய எடியூரப்பாவை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிப்பதே சரியானது'' என குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏ ஸ்ரீராமுலு, '' எடியூரப்பா மீதான விவகாரத்தை அரசியல் செய்வது சரியாகாது. இதில் நீதி விசாரணை அல்லது மக்கள் பிரதிநிதி குழு விசாரணையே போதுமானது. எம்எல்சி பதவி கேட்ட ஒருவரிடம் குமாரசாமி ரூ. 25 கோடி கேட்டுள்ளார். இந்த விவகாரத்தையும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்குமா?''என கேள்வி எழுப்பினார்.

இதற்கு குமாரசாமி, '' நான் எங்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகியிடம் எம்எல்சி பதவிக்காக ரூ. 25 கோடி கேட்டது உண்மை தான். எங்கள் கட்சி மாநில கட்சி. எங்களுக்கு பாஜக போல பன்னாட்டு நிறுவனங்கள் கோடி கோடியாய் நன்கொடை வழங்குவதில்லை. இது போன்ற சில பதவிகளுக்காக பணம் கேட்கிறோம். அந்த பணம் தேர்தலை எதிர்கொள்ளவும், கட்சியை நடத்தவுமே பயன்படுத்தப்படுகிறது. நான் விசாரணைக்கும் தயாராக இருப்பது போல எடியூரப்பா எல்லாவிதமான விசாரணைக்கு தயாராக இருக்கிறாரா?'' என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார், '' எடியூரப்பாவின் ஆடியோ விவகாரத்தை சிறப்பு புலனாய்வு குழு மட்டுமே விசாரிக்கும். வேறு அமைப்பு விசாரிக்கக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபடுவது தேவையற்றது'' எனக்கூறி, அவையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close