[X] Close

காலாவதியாகும் முத்தலாக் தடை மசோதா


triple-talaq

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 10:32 am
  • அ+ அ-

மாநிலங்களவையில் குடியுரிமை திருத்தம், முத்தலாக் தடை மசோதாக்கள் நிறைவேற்றப்படாததால், ஜூன் 3-ம் தேதி அவை காலாவதியாகி விடும்.

வெளிநாட்டில் இருந்து வந்து சட்டவிரோதமாக தங்குவதை தடுக்க குடியுரிமை திருத்த மசோதா மற்றும் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதைத் தடுக்கும் மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை.

இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவிக் காலம் ஜூன் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போதைய அரசின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரும் நேற்று காலவரையன்றி தள்ளிவைக்கப்பட்டது. அதனால், மேற்கூறிய 2 மசோதாக்களும் ஜூன் 3-ம் தேதி காலாவதியாகிவிடும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close