[X] Close

3 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 100 அரசு ஊழியர்கள் மீது சிபிஐ ஊழல் வழக்குப் பதிவு


cbi-filed-corruption-cases-against-4-100-government-employees-in-3-years

  • போத்திராஜ்
  • Posted: 14 Feb, 2019 09:44 am
  • அ+ அ-

 

புதுடெல்லி, பிடிஐ

கடந்த 3 ஆண்டுகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் அவர் கூறியதாவது:

கடந்த 2016 முதல் 2018 வரையிலான 3 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 123 அரசு ஊழியர்கள் மீது ஆயிரத்து 767 ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. இதில் 900 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 59 வழக்குகளில் துறை ரீதியான நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 89 வழக்குகள் முடிக்கப்பட்டுவிட்டன.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 900 வழக்குகளில், 19 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டன. 9 வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். 4 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஊழலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊழல் தடுப்புச் சட்டத்தை கடுமையாக்கி ம் கடந்த ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது

இந்த ஆண்டில் ஜனவரியில் மட்டும் மொத்தமாக 67 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் 765 வழக்குகளையும், 2017-ஆம் ஆண்டில் 940 வழக்குகளையும், 2016-ஆம் ஆண்டில் 925 வழக்குகளையும் சிபிஐ அமைப்பு பதிவு செய்துள்ளது.

இவ்வாறு ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close