[X] Close

மோடியைத் தாக்கி மம்தா எழுதிய கவிதை - வைரலாகும் வரிகள்


  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 13 Feb, 2019 17:33 pm
  • அ+ அ-

ஜனநாயகத்தைக் காக்கும் விதமாகவும் மோடியைத் தாக்கியும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதிய கவிதை, இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரசியல் தாண்டி பன்முகத் திறமை கொண்டவர் மம்தா. பாட்டுப் பாடுவார், ஓவியம் வரைவார். இசைக்கருவிகளை மீட்டுவார். 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியைத் தாக்கி, அவர் 'சாவி' என்ற தலைப்பில் கவிதை எழுதியுள்ளார். 18 வரிகளைக் கொண்ட இக்கவிதை இன்றைய பார்வையில் ஜனநாயகத்தைக் காப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்துகிறது.

கவிதையில், எவ்வாறு எல்லோரின் உதடுகளும் பூட்டப்பட்டிருக்கின்றன, இந்த அமைப்பு (பாஜக அரசு)  எப்படி ஜனநாயகத்தை இக்கட்டான சூழலில் தள்ளுகிறது என்று மம்தா விவரிக்கிறார்.

டெல்லியில் எதிர்க்கட்சிகளின் தர்ணாவுக்கு சிறிது நேரம் முன்பாக மம்தா இதை எழுதியுள்ளார். அவரின் கைப்பட எழுதப்பட்ட கவிதை, முதல் முறையாக அப்படியே ட்விட்டரில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும் மற்ற எதிர்க்கட்சியினரும் கவிதையை வைரலாக்கி வருகின்றனர்.

முன்னதாக, மோடியை எதிர்த்து பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சி தலைவர்களை வரவழைத்து கொல்கத்தாவில் மாபெரும் பேரணியை மம்தா நடத்தியது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close