[X] Close

ரஃபேல்: சிஏஜி அறிக்கை கூறுவது என்ன? - 10 முக்கிய தகவல்கள்


rafael

  • நெல்லை ஜெனா
  • Posted: 13 Feb, 2019 16:35 pm
  • அ+ அ-

புதுடெல்லி

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தலைமைத் தணிக்கைக் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தை விடவும் 2016-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் பல அம்சங்கள் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்னற. இந்தநிலையில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தலைமைத் தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று  தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

* இந்தியாவுக்கு மட்டுமே உரிய சிறப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களை (India Specific Enhancements) பார்க்கும்போது 2016-ம் ஆண்டு  ஒப்பந்தம் 17.08% மலிவாக உள்ளது.

* பொறியியல் சார்ந்த அம்சங்கள் மற்றும் தடவாளங்களை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது ரஃபேல் ஒப்பந்தம் 6.54% விலை அதிகமாக உள்ளது.

* மொத்தத்தில் 2007-ல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைக் காட்டிலும் 36 போர் விமானங்களின் விலை 2016-ம் ஆண்டு தற்போதைய பாஜக அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் 2.86% குறைவாக உள்ளது

* பிரதமர் மோடி தலைமையிலான அரசு அதிகமான செலவில் ரபேல் ஒப்பந்தத்தை செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் இந்தியா சார்ந்த சில மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் 2016-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது.

* கடந்த 2010-ம் ஆண்டு நிலவரப்படி சில குறிப்பிட்ட தரம் தேவை என விமானப்படை கேட்டுக்கொண்டது. அது இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் நான்கு அம்சங்கள் தற்போதைய நிலையில் தேவையற்றது என சிஏஜி அறிக்கை கூறுகிறது.

* 2007-ம் ஆண்டு ஒப்பந்த்தின்படி 126 ரபேல் விமானங்களுடன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துக்கு தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் அம்சம் இடம் பெற்று  இருந்தது. ஆனால் 2016-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் இது சேர்க்கப்படவில்லை.

* டசால்ட் நிறுவனத்துக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை பிரான்ஸ் ஏற்கவில்லை. இதனையும் சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

* 2016-ம் ஆண்டு ஒப்பந்த்தின்படி விரைவாக விமானங்களை ஒப்படைக்க வேண்டும் என்ற பிரிவு உள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய கணக்கு தணிக்கை துறை இரு ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களிலும் விமானங்களை ஒப்படைப்பதில் பெரிய வித்தியாசம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 2007-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி 18 விமானங்கள் 50 மாதங்களுக்குள் சப்ளை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 2016-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி 53 மாதங்களுக்குள் சப்ளை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

* ரஃபேல் ஒப்பந்த்தில் நிலையான விலை எதையும் குறிப்பிடவில்லை. சந்தை நிலவரத்தையொட்டி மாற்ற தகுந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு சேமிப்பு ஏற்படும் என மத்திய அரசு வாதம் வைத்துள்ளது. ஆனால் சிஏஜி அறிக்கையில் இதுபற்றி ஏது குறிப்பிடவில்லை.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close