[X] Close

மோடிக்கு ஆதரவு திரட்டும் மணமகன்


modi

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 09:17 am
  • அ+ அ-

வரும் மக்களவைத் தேர்தலில் மோடிக்கு வாக்களிக்குமாறு ஹைதராபாத்தை சேர்ந்த மணமகன் ஒருவர் தனது திருமண பத்திரிகையில் அச்சிட்டு உறவினர், நண்பர்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

ஹைதராபாத் சம்ஷாபாத் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் ராவ். இவரின் 4-வது மகன் முகேஷ். இவருக்கு வரும் 21-ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது. தனது திருமண பத்திரிகையை முகேஷ் அச்சடித்து தனது நண்பர்கள், உறவினர்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

அதில், “ வரப்போகும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதை எனது திருமண பரிசாக கருதுகிறேன்” என அச்சிட்டு உள்ளார். இது குறித்து முகேஷ் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளினால் நான் மிகவும் கவரப்பட்டேன். அவரது தீவிர தொண்டன். அவரது ஆட்சியில் தான் ஊழல் இல்லை. நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது. இதனால்தான் எனது திருமண பத்திரிகையில் கூட மோடிக்கு வாக்களிக்கும்படி வலியுறுத்தி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close